சென்னையில் இலங்கையின் அரசியல் சாசனம் எரித்து போராட்டம்!

எரிக்கப்பட்ட இலங்கையின் அரசியல் சாசனம். ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளும், சிங்கள-பேரினவாத அரசியல் சாசனத்திற்குள்ளும் தீர்வினை நிராகரிக்கும் போராட்டம். இந்தியா-இலங்கை-அமெரிக்கா-இங்கிலாந்து நாடுகளின் துணையோடு கொண்டுவரும் தீர்மானத்தினை நிராகரிக்கும் மே17 போராட்டத்தில் பங்கேற்ற தோழர்,திருமாவளவன், தோழர், கோவை ராமகிருட்டிணன், தோழர்.கரீம், தோழர்.சுந்தரமூர்த்தி, தோழர்.டைசன் மற்றும் மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர்.ப்ரவீன்.

தமிழீழ விடுதலையை அழிக்கும் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, இலங்கை தூதரகங்கள் / அலுவலகங்கள் முற்றுகை..

தற்போது நடைபெற்று வரும் ஐ.நா.வின் மனித உரிமை ஆணைய 34வது அமர்வில், அமெரிக்காவும், இங்கிலாந்தும் இலங்கையுடன் இணைந்து மீண்டும் ஒரு தீர்மானத்தை கொண்டு வருவதற்காக வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் இலங்கைக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கவும், இலங்கை அரசின் அனுமதியுடன் உள்நாட்டு கலப்பு விசாரணையை முன்மொழிகின்றது. இந்த கால அவகாசம் இனப்படுகொலை தடயங்களை அழிக்கவும், குற்றத்திலிருந்து தப்பிக்கவும் இலங்கை அரசிற்கு வழங்கப்பட்டுள்ளதாகவே பார்க்க முடிகிறது.

இந்நிலையில்,
1) இலங்கை அரசு மீது இனப்படுகொலைக்கான விசாரணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க வேண்டும் அல்லது சர்வதேச தீர்ப்பாயம் ஒன்றை அமைக்க வேண்டும். இராஜபக்சே, சிரிசேனா, இரணில் விக்கிரமசிங்கே, சந்திரிகா குமாரதுங்கா என அனைவரும் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வைண்டிய இனப்படுகொலை குற்றவாளிகளே.

2) மேலும் தமிழர்களுக்கு நீதியாக அவர்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு, தமிழீழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
என்ற கோரிக்கைகளை முன்வைத்து இன்று (20-03-2017) காலை 10 மணியளவில் சென்னை எழும்பூர் இராசரத்தினம் மைதானம் முன்பு மே பதினேழு இயக்கம் தோழமை அமைப்புகளுடன் இணைந்து தமிழீழ விடுதலையை அழிக்கும் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, இலங்கை தூதரகங்கள் / அலுவலகங்கள் முற்றுகையிட்டன. போராட்டத்தில் தமிழர்களுக்கு தீர்வாக வைக்கப்படும் இலங்கையின் தமிழர் விரோத புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் நகல் தீயிலிட்டு கொழுத்தப்பட்டது.

மே பதினேழு இயக்கத்தினால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த முற்றுகை போராட்டதிற்கு மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன்குமார் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை .இராமகிருஷ்ணன், எஸ்.டி.பி.ஐ. (SDPI) கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கரீம், தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் டைசன், தமிழர் விடுதலை கழகம் தோழர் சுந்தரமூர்த்தி, தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தோழர் வினோத் ஆகியோர் பங்கேற்றனர்.

மே பதினேழு இயக்கம்,

Related posts

Top