மட்டு. தாளங்குடாவில் மிதி வெடி மீட்பு

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாளங்குடாவில் மிதிவெடியொன்று மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியில் தாளங்குடாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இம் மிதிவெடி மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். தாளங்குடா பிரதான வீதியிலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில் புற்கள் நிறைந்த காட்டின் நடுப்பகுதியிலேயே இம்மிதிவெடி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புற்கள் வெட்டிக்கொண்டிருந்த கூலித்தொழிலாளியொருவர் கொடுத்த தகவலின் பிரகாரம் மிதிவெடியை மீட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

Top