துருக்கியில் ராணுவ சதிப்புரட்சியில் ஈடுபட்டோருக்கு மரண தண்டனை: ஜனாதிபதி

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சதி செய்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் ராணுவ சதிப்புரட்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படும் என துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரங்களை வழங்கும் சர்வஜன வாக்கெடுப்பை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதிக்கான நிறைவேற்று அதிகாரங்களை வழங்குதல் உள்ளிட்ட அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கள் தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.

இந்த மறுசீரமைப்புக்கள் ஊடாக பாரம்பரியமாக உள்ள ஜனாதிபதி பதவி மாற்றப்படுவதுடன், பிரதமருக்கான அலுவலகம் நீக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Top