இராணுவத்தை பாதுக்க முயலும் டெஸ்மன் சில்வா !

சிறீலங்கா இராணுவத்தினர் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லையென உறுதிப்படுத்தி பிரித்தானியாவில் வசிக்கும் சட்டத்தரணி டெஸ்மன் சில்வா தலைமையில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற சட்டத்தரணிகள் ஐவர் அடங்கிய குழுவினால் தயாரிக்கப்பட்ட 7 அறிக்கைகள் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரான தகவல்களை வைத்து குறித்த நீதிபதிகள் குழுவினரால் தயாரிக்கப்பட்ட ஏழு அறிக்கைகளும் ஏற்கனவே ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையில், பிரித்தானியாவின் யுத்தம் தொடர்பான நிபுணர் மேஜர் ஜெனரல் ஜோன் ஹொல்மஸ்த் இனால் வழங்கப்பட்ட தகவல்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையில், இறுதி யுத்தத்தின் போது சிறிலங்கா இராணுவத்தினர் யுத்தக் குற்றச் செயல்கள் எதிலும் ஈடுபடவில்லையெனவும், யுத்த சட்ட விதிமுறைகள் எதையும் மீறவில்லையெனவும் குறித்த அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Top