காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஐ.நா.வும் பொறுப்புக்கூற வேண்டும்: அனந்தி சசிதரன்

இறுதிக்கட்ட போரின்போது தமது உறவுகளை ராணுவத்திடம் கையளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை, அப்போது சமாதான பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டிருந்த ஜப்பான், நோர்வே, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய இணைத்தலைமை நாடுகளே ஏற்படுத்தியிருந்தன என வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடரில், பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் கலந்துகொண்டுள்ள அனந்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் இந்தியாவும் மறைமுகமாக தமது ஆதரவை வழங்கியிருந்ததாக குறிப்பிட்டுள்ள அனந்தி, காணாமல் போனவர்கள் மற்றும் சரணடைந்தவர்கள் தொடர்பில் இந்தியா, ஐ.நா. சபை மற்றும் இணைத் தலைமை நாடுகளே பொறுப்புக் கூற வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச நாடுகளை நம்பி தமது உறவுகளை ஒப்படைத்துவிட்டு, இன்றுவரை அவர்களை காணாமல் உறவினர்கள் தவித்து வருவதாக சுட்டிக்காட்டிய அனந்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு சர்வதேச விசாரணைப் பொறிமுறையை இலங்கையில் ஏற்படுத்துவது அவசியமென இதன்போது வலியுறுத்தினார்.

Related posts

Top