ஐ.நா மனித உரிமைச்சபையில் தமிழர்களுக்கு நீதி மீண்டுமொருமுறை மறுக்கப்பட்டிருக்கிறது : புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டறிக்கை !!

சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள 34:1 தீர்மானமானமானது, தமிழ்மக்களுக்கு மீண்டுமொருமுறை நீதி மறுக்கப்பட்டிருப்பதாக புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டாக தெரிவித்துள்ளன.

இன்று ஜெனீவாவில் செய்தியாளர்களைச் சந்தித்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அனைத்துலக மக்களவை உள்ளடங்க பல தமிழ் அமைப்புக்கள் இத்தீர்மானம், உலகத் தமிழர்களுக்கு வருத்தத்தையும், பெருத்த ஏமாற்றத்தையும் தந்திருப்பதாகத் தெரிவித்துள்ளன.

மனித உரிமைச்சபையினால் சிறிலங்கா அரசுக்கு கொடுக்கப்படும் கால அளவாசகத்தினைக் வைத்துக்கொண்டு, ஒரு புறத்தில் தமிழர்களிடத்தில் இயங்கும் நீதிக்கான மனநிலையை குலைப்பதும், மறுபுறத்தில் வளமான கட்டமைப்புகளை தமிழர் பகுதியில் கொண்டுவருவதன் மூலம் சிங்கள குடியேற்றங்களை செய்தும் சிறிலங்கா வருகின்றது என புலம்பெயர் அமைப்புக்கள் குற்றம்சாட்டியுள்ளன.

அதே சமயம் இனப்படுகொலையின் தடயங்களை அழித்து வருவதற்கும் இந்த கால அளவையும் பயன்படுத்திக்கொள்கிறது என குற்றஞ்சாட்டியுள்ள புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள், சிறிலங்கா அரசாங்கம் ஒரு பொழுதும் தமிழர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றியதும் இல்லை, அதே சமயம் அரசியல் தீர்வையும் முன்வைத்ததில்லை எனவும் தெரிவித்துள்ளன.

இந்நிலையில்கீ ழ் வரும் காரணங்களை கவனத்தில் எடுத்துக்கொண்டு,

– தமிழர்களின் தேசியத்திற்கான சுயநிர்ணய உரிமையி உறுதி செய்யவேண்டும்
– சிறிலங்கா விவகாரத்தினை ஐ,நாவின் பொதுச்சபையின் விசாரணைக்கு அனுப்பிட வேண்டும்.
– ஐ.நா பொதுச்சபை வழியே, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு சிறிலங்காவை பாரப்படுத்துவதற்கான பரிந்துரையினை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு வழங்க வேண்டும்.
– இலங்கைத்தீவின் இனநெருக்கடிக்கு தீர்வுகாண வடக்கு கிழக்கு பகுதியிலும், புலம்பெயர் தமிழர்களிடத்திலும் பொதுவாக்கெடுப்பினை நடத்துவற்குரிய நிலை ஏற்படுத்த வேண்டும்.

மார்ச் 23ம் தேதி 2017ல் ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை முற்றாகம் தாம் நிராகரிப்பதாக தெரிவித்துள்ளன.

Top