வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான தலைமைத்துவத்தை இலங்கை வழங்க வேண்டும்: பிரித்தானியா

ஐ.நா. மனித உரிமை பேரவைக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு சிறந்த தலைமைத்துவத்தை இலங்கை அரசாங்கம் வழங்கவேண்டுமென பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரிட்டன் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய பிரதி அமைச்சர் ஜொய்ஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்தோடு, ஐ.நா. தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்றுவதற்கான கால எல்லையுடனான தந்திரோபாயத்தை உருவாக்க வேண்டும் என்றும், நல்லிணக்கச் செயலணியின் பரிந்துரைகளை கவனத்தில் எடுக்கவேண்டும் என்றும் ஜொய்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இலங்கை இணை அனுசரனை வழங்கியதை வரவேற்பதாகவும், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்துக்கு வழங்கும் முக்கியத்துவம் குறித்து சிறந்த சமிக்ஞைகளை இலங்கை வெளிப்படுத்தியுள்ளதாகவும் ஜொய்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Top