இரணைமடு காட்டில் நுழைந்த மூவர் கைது

கிளிநொச்சி, இரணைமடு காட்டுக்குள் அனுமதியின்றி நுழைந்து விறகு வெட்டிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் அதிரடிப்படையின் கிளிநொச்சி முகாம் அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலில் இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து உழவு இயந்திரம், விறகு வெட்டும் இயந்திரம் உள்ளிட்ட பொருட்களை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக ஒலுமடு வன ஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

Top