வட மாகாண சபையும் ஐரோப்பிய ஒன்றியமும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும்!

வட மாகாண சபையும் ஐரோப்பிய ஒன்றியமும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை அதிகாரி போல் கோட் ப்ரே வலியுறுத்தியுள்ளதாக, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை அதிகாரி போல் கோட் ப்ரே மற்றும் வடமாகாண முதலமைச்சருக்கும் இடையில், இன்று திங்கட்கிழமை (03) சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இது குறித்து வடக்கு முதல்வர் குறிப்பிட்டுள்ளதாவது,

மாகாண முதலமைச்சரின் உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் வடமாகாணத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.

இதேவேளை, வடமாகாண மக்களுடன் எவ்வாறு வேலை செய்யலாம் என அவர் கேள்வி எழுப்பியதுடன், மக்களின் தேவைகள் குறித்தும் ஆராய்ந்தார். இதன்போது, கடந்த காலங்களில் வடமாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்களை எம்முடன் கலந்தாலோசிக்காது நடைமுறைப்படுத்துவது பிழை என சுட்டிக்காட்டியிருந்தேன்.

இதனடிப்படையில், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் வடமாகாண சபைக்கும் இடையில் எவ்வாறான புரிந்துணர்வுடன் செயற்பட வேண்மென கேள்வி எழுப்பியதுடன், வடமாகாணத்தில் எவ்வாறான செயற்த்திட்டங்களில் ஈடுபட வேண்டுமென்றும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் செயற் திட்டங்களில் ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் கோரியுள்ளார்.

எனவே, எதிர்காலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாக முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

Top