இளைஞரை நாடு கடத்துகிறது கனடா!

தனது மனைவியை கொலை செய்தார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள, இலங்கைத் தமிழரை நாடு கடத்துமாறு கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபை கட்டளையிட்டுள்ளது.

சிவலோகநாதன் தனபாலசிங்கம்,என்ற 31 வயதுடைய நபரையே நாடு கடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

எனினும் இந்த தீர்ப்புக்கு எதிராக அவர் மேன்முறையீடு செய்ய முடியும். இந்தநிலையில் அவரை நாடு கடத்தும் கட்டளையை நடைமுறைப்படுத்த காலம் செல்லும் என்று கனேடிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

2012ம் ஆண்டு இவரது மனைவியான 21 வயதுடைய அனுஜா பாஸ்கரனின் சடலம் குடியிருப்பு ஒன்றில்கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து சிவலோகநாதன் தனபாலசிங்கம் கைது செய்யப்பட்டார்.

Related posts

Top