சர்வதேச மன்னிப்பு சபையின் போலி முகம் தெரிகின்றது!

சர்வதேச மன்னிப்பு சபை ஜநாவினில் இலங்கை வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டுமென ஊடகங்களிற்கு அறிவித்துவிட்டு தற்போது அதே ஜநாவினில் பொய் வாக்குறுதிகளை சொல்லிக்கொண்டிருக்கின்ற இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை கௌரவித்திருக்கின்றமை கண்டிக்கத்தக்கதென தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தினில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டினில் கருத்து வெளியிட்ட அவர் சர்வதேச மன்னிப்புச்சபையின் இந்நடவடிக்கை கண்டிக்கத்தக்கதும் கேலிக்குரியதெனவும் தெரிவித்தார்.

இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் போன்றவர்கள் அழைக்கப்பட்டால் பரவாயில்லை.ஏனெனில் அவர்கள் பகிரங்கமாகவே சர்வதேச விசாரணையோ உள்ளுர் விசாரணையோ இல்லையென்கின்றனர்.ஆனால் அவர்களை தாண்டி ஜநாவினில் விசாரணைகள் நடத்தப்படுமென பொய் வாக்குறுதிகளை வழங்கி சர்வதேசத்தை ஏமாற்றிக்கொண்டிருக்கும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை கௌரவித்திருக்கின்றமை சர்வதேச மன்னிப்பு சபையின் நம்பகத்தன்மையினை கேள்விக்குள்ளாக்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச மன்னிப்பு சபையின் தென்கிழக்காசிய அலுவலக திறப்பு விழா நிகழ்வினிலே இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை கௌரவித்த்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Top