இரா.சம்பந்தன் விரல் சூப்பும் குழந்தையல்ல –கஜேந்திரகுமார்!

மஹிந்த போன்று தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டால் மைத்திரியையும் தமிழ் மக்கள் வீட்டுக்கனுப்புவார்களென இரா.சம்பந்தன் கூறியிருக்கிறார். உண்மையினில் மைத்திரி –ரணிலையல்ல இரா.சம்பந்தனையும் தமிழ் மக்கள் சேர்த்து அனுப்பிவைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற சமகால அரசியல் நிலைமைகள் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதற்கிடையில், அரசாங்கத்தை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள் என கூறி கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தப்பித்துக்கொள்ள முற்பட்டுள்ளார்.அவர் மட்டுமல்ல அவரது வால் மற்றும் பின்னால் அலைந்து திரியும் கும்பலும் மக்களால் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்களெனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தாம் மக்களுடைய பக்கம் நிற்பதாக காட்டி கொள்வதற்கே இரா.சம்பந்தன் வவுனியாவினில் பேசியிருப்பதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.
தனியார் நிறுவனம் ஒன்றினால் அமைக்கப்பட்ட வீடமைப்பு திட்டத்தை கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் மஹிந்த அரசாங்கத்தை வீட்டக்கு அனுப்பியதைப் போன்று இந்த மைத்திரி அரசாங்கத்தையும் வீட்டுக்கு அனுப்புவார்கள் என கூறியுள்ளார்.
எங்களுடைய வயதின் அளவுக்கு அரசியல் அனுபவம் உள்ளது என அடிக்கடி கூறும் சம்பந்தனுக்கு அரசாங்கம் ஏமாற்றும் என்பது இப்போது தான் தெரியுமா? சம்மந்தன் என்ன கைவிரல் சூப்பிக்கொண்டிருக்கும் குழந்தையாவெனவும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். ஜநாவினில் கால அவகாசம் கொடுத்து காப்பாற்றிக்கொண்டிருக்கும் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவது தொடர்பாக சம்பந்தன் பேசக்கூடாது என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Top