அமெரிக்காவினால் ஆப்கான் மீது அணுகுண்டு தாக்குதல்!

ஆப்கனில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை அழிக்கும் நோக்கத்துடன், பயங்கர சக்தி வாய்ந்த குண்டு ஒன்றை, நேற்று அமெரிக்கப்படையினர் வீசினர்.

தலிபான் மற்றும் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் அட்டகாசம் செய்து வரும் ஆப்கனிஸ்தானில், அரசு படையினருக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான ‘நேட்டோ’ ராணுவத்தினர் போரிட்டு வருகின்றனர். எனினும் நாளுக்கு நாள் பயங்கரவாதிகளின் கொட்டம் அதிகரித்து வருகிறது.

நாட்டின் கணிசமான மாவட்டங்களை கைப்பற்றியுள்ள பயங்கரவாதிகளை ஒடுக்க, புதிதாக பொறுப்பேற்றுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக, பயங்கரவாதிகளை கூண்டோடு ஒழிக்க அதிக சக்தி வாய்ந்த குண்டுகளை பயன்படுத்த ராணுவத்துக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

அதன்படி நேற்று முதல் முறையாக, ஜி.பி.யு.,43பி என்ற அதிக சக்தி வாய்ந்த குண்டு, நங்ககார் மாகாணத்தில் அச்சின் மாவட்டத்தில் ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் பதுங்குமிடத்தை குறி வைத்து விமானம் மூலம் வீசப்பட்டது. ஆப்கன் நேரப்படி, நேற்றிரவு 7 மணிக்கு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. ‘அனைத்து குண்டுகளின் தாய்’ என அழைக்கப்படும் இந்த குண்டு, 21 ஆயிரம் பவுண்டு எடை கொண்டது. இது போன்ற சக்தி வாய்ந்த குண்டை, போர் நடவடிக்கையில் பயன்படுத்துவது இதுவே முதல் முறை.

இந்த குண்டு, ஈராக்கில் சதாம் உசேனுக்கு எதிராக போர் நடத்தியபோது, தயாரிக்கப்பட்டதாகும். ஆனால், அப்போது பயன்படுத்தப்படவில்லை. இப்போதுதான் முதல் முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பலியானோர் விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை. அமெரிக்க ராணுவத்தின் இந்த திடீர் தாக்குதல், ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

Top