“பொட்டம்மான் உயிரிழந்தார் என நான் கூறவில்லை“ – கருணா

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மான் உயிரிழந்தார் என்று நான் கூறவில்லை என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா தெரிவித்துள்ளார்.

கொழும்பு பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், பொட்டு அம்மானின் சடலம் கிடைக்கவில்லை. எனவே அவர் உயிரிழந்தார் என உறுதிப்படுத்தி என்னால் கூற முடியாது.

ஆனால் பொட்டு அம்மான் உயிரிழந்தார் என இராணுவம் கூறுகின்றது. 2009ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதியின் பின்னர் இலங்கையில் பொட்டு அம்மான் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடையாது.

சடலம் கிடைக்காத காரணத்தினால் எமில்காந்தன், பொட்டு அம்மான் இறந்ததாக கூற முடியாது என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா தெரிவித்துள்ளார்.

பொட்டு அம்மான் இல்லை என்று என்னாலும் கூற முடியாது என கருணா மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

Top