அதிமுக இணைப்புக்கு வாய்ப்பில்லை: ஓ.பி.எஸ் பல்டி!

அதிமுகவில் சசிகலா குடும்பம் இருக்கும் வரை இணைப்புக்கு வாய்ப்பில்லை என்று முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.

தேனியில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக இணைப்பு குறித்து நான் கூறிய கருத்தை ஊடகங்கள் தவறாக சித்தரித்துவிட்டன. ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தும் வரை ஓயமாட்டோம். எங்களின் அடிப்படைக் கொள்கைகளில் எந்தவித மாற்றமும் இல்லை. அதிமுகவில் சசிகலா குடும்பம் இருக்கும் வரை இரு அணிகளும் இணைய வாய்ப்பில்லை.

அதேபோல சசிகலா பல நிர்வாகிகளை நீக்கம் செய்துள்ளர். அது அதிமுக சட்டவிதிகளுக்கு முரணானது. எனவே தேர்தல் ஆணையத்திடம் இதுறித்து முறையிட்டுள்ளோம். என்றார்.

Related posts

Top