தமிழ் மக்களின் அகிம்சை போராட்டத்தை ஆரம்பித்தவர் அன்னை பூபதி: பிரபாகரன்

தமிழ் மக்களின் போராட்டத்தை அகிம்சை வழிப்போராட்டமாக மாற்றியவர் அன்னை பூபதி என ஜனநாயக போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கணேசன் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பு ஊடக கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டார்.

தமிழ் மக்களின் உரிமைக்காக போராடிய தியாக தீபம் அன்னை பூபதியின் 29ஆம் வருட நினைவு தினத்தை நாளை மட்டக்களப்பு அரசடி தேவநாயகம் மண்டபத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டியில் முதன்முறையாக குறித்த நிகழ்வு நடைபெற உள்ளதாகவும் எதிர்காலத்திலும் இவ்வாறான மேலும் பல நிகழ்வுகள் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த பத்து வருடங்களாக அன்னை பூபதியின் நினைவு தினத்தை யாரும் அனுஷ்டிக்கவில்லை எனவும் கணேசன் பிரபாகரன் கூறினார்.

இந்த நிகழ்விற்கு மட்டக்களப்பு மற்றும் ஏனைய மாவட்டங்களில் உள்ள சகல போராளிகளுக்கும் அவர் இதன்போது அழைப்பு விடுத்தார்.

Related posts

Top