இலங்கையின் தொழிலாளர் உரிமைகள் தொடர்பில் ஐ.ரோ ஒன்றியத்தின் குழு விமர்சனம்!

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகைக்கான, இலங்கையின் விண்ணப்பம் தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு முன்னர், இலங்கையின் தொழிலாளர் உரிமைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உண்மையறியும் குழுவொன்று விசனங்களை தெரிவித்துள்ளது.

சுதந்திர வர்த்தக வலயத்தினுள் தொழிலாளர் உரிமைகள் மீறப்படுதல், பாலியல் தொல்லை, தொழிற்சங்கத் தலைவர்களை வேலை நீக்கம் செய்தல், தொழிற்சங்கங்களுக்குத் தொல்லை கொடுத்தல் உட்பட தொழிலாளர் உரிமை மீறல்களுக்கு முகம் கொடுக்கும் ஊழியர்களை, ​ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு சந்தித்துள்ளது என சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவைகள் ஊழியர் சங்கம் கூறியது.
ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆன் மேரி மற்றும் லோலா கல்டென்றி உட்பட உண்மையறியும் குழுவினர் மனித மற்றும் தொழிலாளர் உரிமைகள் தொடர்பில் இலங்கையின் முன்னேற்றம் குறித்து மதிப்பிட வந்தனர். தொழிலாளர்களை, அவர்களது தொழிற்சங்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமையென ஆன் மேரி கூறினார். “கூட்டாகப் ​பேரம் பேசும் உரிமை, வேலை நிறுத்தம் செய்யும் உரிமை” என்பன, இதன் தவிர்க்க முடியாத அம்சங்கள் ஆகும்.

ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகைக்குக் கிடைக்கும் நன்மைகளை ஒரு சில வர்த்தகர்களே அனுபவிக்கும் நிலைமை இருப்பின், ஐரோப்பிய ஒன்றியம் விசேட வர்த்தக அந்தஸ்தை இலங்கைக்கு வழங்குவது குறித்துப் பரிசீலிக்கும் என, லோலா கல்டென்றி கூறினார். ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையைப் பெற இலங்கை தகுதியுள்ளதா என, ஐரோப்பிய ஒன்றியம் அடுத்த மாதம் தீர்மானிக்கும்.
மனித மற்றும் தொழிலாளர்கள் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயங்களைச் செயற்படுத்தும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் விசேட வர்த்தக சலுகை வழங்கப்படும். மனித உரிமை மீறல்கள் தண்டிக்க சட்டங்கள் இயற்றியதால் 2015 இல் நாம் திருப்தியடையக் கூடியதாக இருந்தது.

ஆனால், இந்தச் சட்டங்களை அமுலாக்குவது தொடர்பில் கேள்விகள் உள்ளன என ஆன் மேரி கூறினார். தாம் அணியும் ஆடைகளை பெண்கள் எவ்வளவு மோசமாக நிலைமையிலிருந்து தயாரிக்கின்றனர் என, ஐரோப்பிய ஒன்றிய நுகர்வோர் அறிவாரெனில் அவர்கள் வெட்கித் தலைகுனிவர் எனவும் லோடா கல்டென்ரி கூறினார். இந்தத் தூதுக்குழு, தொழில் அமைச்சு ஜோன் செனவிரத்னவைச் சந்தித்த போது இலங்கையில் தொழில் உரிமைகள் தொடர்பில் தமது கடுமையான விசனங்களை வெளிப்படுத்தினார்.

Top