மகிந்தவை சந்திக்க திட்டமிட்டுள்ள த.தே.கூட்டமைப்பு!

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனும், மஹிந்த ஆதரவு பொது எதிரணியுடனும் விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கூட்டமைப்பின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. எனினும், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட மாட்டாதெனவும் அரசியலமைப்பு திருத்தமே மேற்கொள்ளப்படும் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு சாரார் தெரிவித்து வரும் நிலையில், மீளவும் பேச்சுவார்த்தை நடத்த கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து மஹிந்த ஆதரவு பொது எதிரணியுடன் தனியாக பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக கடந்த வாரம் மக்கள் விடுதலை முன்னணியுடன் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததோடு, ஏற்கனவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூடனும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸூடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

Top