மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர் மரணம்; பாசையூர் கடலில் பரிதாபம்!

மீன்­பி­டித்­துக் கொண்­டி­ருந்த குடும்­பத்­த­லை­வர் மார­டைப்­பால் பட­கில் உயி­ரி­ழந்­தார் என்று விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.யாழ்ப்­பா­ணம், பாசை­யூ­ரைச் சேர்ந்த அந்­தோ­னிப்­பிள்ளை வின்­சன் சியஸ் (வயது – 57) என்­ப­வரே உயி­ரி­ழந்­தார்.

இந்­தச் சம்­ப­வம் நேற்று முற்­ப­கல் இடம்­பெற்­றது.“யாழ்ப்­பா­ணம், பாசை­யூ­ரி­லி­ருந்து சுமார் 6 கிலோ­மீற்­றர் கடல் தூரத்­தில் அவர் பட­கி­லி­ருந்து கட­லில் இறங்கி நின்று தொழி­லில் ஈடு­பட்­டி­ருந்­தார். திடீ­ரென மார­டைப்பு ஏற்­பட்டு அய­லில் தொழி­லில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்­க­ளி­டம் சைகை மூல­மா­கத் தக­வ­லைக்­கூறி அவர் அழைத்­துள்­ளார்.

அவர்­கள் வந்து அவரை மீட்­கும் போது அவர் பட­கில் மயங்­கி­விட்­டார். அவரை கரைக்­குக் கொண்­டு­சென்று யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டார். எனி­னும் குடும்­பத்­த­லை­வர் உயி­ரி­ழந்­து­விட்­டார் என்று மருத்­துவ சோத­னை­யில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது” என்று இறப்பு விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

விசா­ர­ணை­க­ளின் பின்­னர் சட­லம் உற­வி­னர்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

Top