தாழையடி கடல்நீர் குடிநீராக்கும் திட்டத்தால் அபாயமில்லை!

வடமராட்சி, மருதங்கேணி தாளையடி கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தால் வடமராட்சி கிழக்கு மீனவர்களிற்கு எந்தவிதமான பாதகங்களும் ஏற்படாதென இலங்கை கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள கடலடி ஆய்வுபிரிவான நராவின் தலைமை அதிகாரி கலாநிதி கே.அருளானந்தனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மீனவர்களிடையே குறித்த திட்டம் தொடர்பாக உள்ள சந்தேகம் தொடர்பினில் கடந்த ஒருவருட காலமாக நடந்த ஆய்வுகளின்; பெறுபேறுகளில் இருந்து இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தினில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பினில் இதனை தெரிவித்த அவர் மீனவர்களிடையே எழுந்த சந்தேகங்கள் தொடர்பினில் கடந்த ஒருவருட காலமாக நடத்தப்பட்ட ஆய்வறிக்கை ஆயிரத்திற்கும் அதிகமாக பக்கத்தை கொண்டது.இது ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையினில் தாளையடி கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தால் வடமராட்சி கிழக்கு மீனவர்களிற்கு எந்தவிதமான பாதகங்களும் ஏற்படாதென தெளிவாக சான்றுகளுடன் விளக்கப்பட்டுள்ளது.இது பற்றி விளக்கமளிக்ககூட அனுமதியாது நேற்றைய மாவட்ட செயலக கூட்டத்தினில் வடமராட்சி கிழக்கு மீன்பிடி விசேட முறைகள் இதனால் பாதிக்கப்படும் என்ற சந்தேகம் மேற்குறித்த ஆராய்ச்சியின் பெறுபேறுகளில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக திரிபுபடுத்தி கருத்து தெரிவிக்கபட்டிருந்தது.அத்துடன் மீன்பிடி தொழிலை இத்திட்டம் பாதிக்கும் என்ற தீர்மானத்துக்கு வரக்கூடியதாக உள்ளதாக தெரிவித்து கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Top