கிளிநொச்சியில் காற்றுடன் கூடிய மழை வீடுகள் சேதம்!

கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழையினால் பல வீடுகள் சேதமடைந்துள்ளது.

அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தின் பொன்னகர், பாரதிபுரம், செல்வபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள வீடுகளே இவ்வாறு சேதமடைந்துள்ளதுடன், பயன்தரும் மரங்களும் சேதமடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

திடீரென மழையுடன் கூடிய பலத்த காற்று வீசியமையால் குறித்த பாதிப்பை மக்கள் எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வீடுகள் சேதமைடைந்துள்ளதால் பாதிக்கப்பட்டு மக்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.

Related posts

Top