இலங்கை மீனவர்கள் 7 பேர் புழல் சிறையிலிருந்து விடுதலை

இந்திய கடல்பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்க 7 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியிலிருந்து 150 கடல் மைல் தொலைவில் இந்திய கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 7 பேரை கைது செய்த இந்திய கடலோர காவல்படையினர், அவர்கள் வந்த படகினையும் பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் மீனவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டதையடுத்து, அவர்கள் புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு, தூத்துக்குடி கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Top