வட்டுவாகல் கடல் காணி மீட்பு போராட்டத்துடன் வன்னி எம்பி சி.சிவமோகன் இணைந்தார்.

2009 கோத்தபாய கடல்படை முகாம் அமைத்து மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டது அதன் பின் இப்பிரதேச மக்கள் தொடர்ந்தும் பல போராட்டங்களை நடத்தி வந்தும் மாவட்டஅலுவலரிடம் பலஎச்சரிக்கை கடிதங்கள் அனுப்பியும் ஒரு பலனும் அல்லாத நிலையில் தொடர்ந்து மக்கள் இன்று படை முகாம் முன்பு அடையள போராட்டம் ஆரம்பித்துள்ளனர் இதன்காரணம் இப்பிரதேச மக்களின் 600ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை கடற்படை இராணுவம் தொடர்ந்தும் அபகரித்து வருகின்றமையே காரணம்.

இது முல்லை மக்களின் வாழ்வியலை பெரிதும் பாதிப்படைய செய்துள்ளதுஅத்துடன் இங்கு இறால் மீன்பிடி தொழிலையே மக்கள் நம்பி வாழ்வதால் இராணுவம் உடனடியாக இக்காணிகளை விட்டு வெளியேற வேண்டுமென மக்கள் கோருவதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய காலாநிதி சிவமோகன் தெரிவித்தார்.

Top