புலத்தில் புலிகளின் தளபதிகளை காட்டிக்கொடுக்கும் ஊடகத் துரோகிகள்!

புலத்தில் புகளிடம்பெற்ற போராளிகளும், தளபதிகளும் தாமிருக்கும் நாடுகளின் பாதுகாப்பு பிரிவினரிடம் தமக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பாக ஆதாரங்களுடன் முறையிட முடிவு!

புலத்திலிருக்கும் புலிகளின் முன்னாள் தளபதிகளை இலங்கை அரசிற்கு காட்டிக்கொடுக்கும் கயவர்களாக மாற்றம்பெற்றுள்ள பிரபல தமிழ் ஊடகங்களில், அண்மைக் காலமாக “தமிழ்வின்” இணையதளமே முன்னணியில் இருந்துவருவதை நாம் நன்கு அவதானிக்க முடிகின்றது.

மேலும் கருணாவையும்,டக்கிளசையும் ஏனைய துரோக அமைப்புக்களையும் நாம் இதுவரை காலமும் துரோகிகளென்று கூறிவரும் நிலையில்,கடந்த 2009ம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கை இராணுவத்தின் கொலைக்கரத்திலிருந்து அவர்களின் கண்களுக்கு மண்ணைத்தூவிவிட்டு புலம்நோக்கி தப்பிவந்த எமது தளபதிகளை இலங்கைப் புலனாய்வாளர்களுக்கு காட்டிக்கொடுக்கும் நயவஞ்சகர்களாக இன்று புலம்பெயர் இணையங்களில் மிகவும் முதன்மையாகக் கருதப்படும் “தமிழ்வின்” இணையமே எமது போராளிகளுக்கு பகிரங்கமாக தாம் துரோகமிழைத்துவருவதை நாம் அவதானிக்கமுடிகின்றது.

உண்மையில் எமது போராளிகளைப்பற்றியோ அன்றி எமது தளபதிகளைப்பற்றியோ இந்த இணையங்களை நடத்துபவர்களுக்கு அவர்கள்மீது அக்கறை இருந்திருந்தால்?அவர்களைப்பற்றிய தகவல்கள் ஏதும் தமக்குக் கிடைத்தால் அதை சம்மந்தப்பட்ட போராளிகளிற்கு தெரியப்படுத்தி எமது போராளிகளையும்,தளபதிகளையும் எதிரியிடமிருந்து தாம் பாதுகாப்பதைவிடுத்து, அவர்களை எதிரிகள் இலகுவாக பிடிப்பதற்கான அவர்கள் தொடர்பான போக்குவரத்துக்களையும், இருப்பிடங்களையும் குறிப்பிட்டு பாரிய துரோகத்தை தமது ஊடகங்கள் வாயிலாக செய்துவருவதை சிறப்பான விடையமாக நாம் கருதமுடியுமா?

மேலும் எமது முன்னாள் தளபதிகளும், போராளிகளும் எமது மண்ணிற்காக கடந்தகாலங்களில் தாம்செய்த தியாகங்களை கடுகளவும் சிந்திக்காத இந்த ஊடகத் துரோகிகள், அவர்களை தமது ஊடகங்கள்வாயிலாக காட்டிக்கொடுப்பதை வெறுமனே எமது கைகளைக் கட்டிக்கொண்டு நாம் தமிழராக இருந்து அதைத் தட்டிக்கேட்பதைவிடுத்து வேடிக்கை பார்க்கமுடியுமா?

மேலும் கடந்தசில தினங்களிற்குமுன்பு “திவயின” எனும் சிங்கள இணையத்தை மேற்கோள்காட்டி அதில்வராத செய்தியொன்றை “தமிழ்வின்” இணையம் சோடித்து “திவயினவில் வந்ததாகக்கூறி” எமது முக்கிய தளபதி ஒருவரை எதிரிகளுக்கு பகிரங்கமாக காட்டிக்கொடுத்துள்ளார்கள்.

உண்மையில் தமிழ்வின் இணையத்தில் பதிவேற்றப்பட்ட செய்திகூட முற்றிலும் உண்மைக்கு புறம்பானதொரு செய்தியென்பதை நாம் சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் தொடர்புகொண்டு அதை உறுதிசெய்துவிட்டோம்.

இருப்பினும் தமிழ்வின் தான் தயாரித்த ஊகமான தகவல்கள் ஒருவேளை புலிகளின் எதிர்கால திட்டங்களாகவும் இருப்பதற்கு சந்தர்ப்பம் இருப்பதனால்’ அதை முன்கூட்டியே எதிரிகளுக்கு காட்டிக்கொடுத்து அழிக்கவேண்டும் என்பதில் நயவஞ்சக தமிழ்வின் இணையம் செயற்பட்டுவருகின்றதா? என்ற சந்தேகங்களும் தற்போது எமது போராளிகள் மத்தியில் எழுந்திருக்கின்றது.

இதைவிட கடந்த சில வராங்களிற்கு முன்பும்கூட விடுதலைப் புலிகள் வெளியிட்டதாகக்கூறி இரண்டு பொய்யான அறிக்கையை தமிழ்வின் இணையம் வெளியிட்டு விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தியதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

தற்போதைய தமிழ்வின்னின் துரோகச் செயற்பாடுகள் சம்மந்தமாக புலத்தில் புலிகளின் தளபதிகளிற்கு அடைக்கலம் கொடுத்திருக்கின்ற அந்தந்த நாடுகளின் பாதுகாப்பு தரப்பினரிடம் எமது தளபதிகளும், போராளிகளும் முறையிட்டு மேற்குறிப்பிட்ட “தமிழ்வின்” உள்ளடங்கலான அனைத்து ஊடகங்களிற்கெதிராகவும் முறையிடுவதற்கு தயாராகிவருகின்றார்கள் என்ற செய்தியினையும் இந்த ஊடகங்களுக்கு இங்கே எச்சரிக்கையுடன் நான் பதிவுசெய்கின்றேன்.

நன்றி

முகநூல் பதிவு

Top