கிழக்கு மாகாண ஆளுநரின் செயலகத்திற்கு முன்பாக அன்னை பூபதியின் நிகழ்வு

கிழக்கு மாகாண ஆளுநரின் செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற இந்த நிகழ்வில், காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகளால் அன்னை பூபதிக்கு மலரஞ்சலி செலுத்தி நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.

தமிழர் தாயகப்பகுதியை ஆக்கிரமித்திருந்த இந்திய படையினரை வெளியேறக்கோரி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில் குருந்த மரநிழலில் ஒருமாத காலமாக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்த அன்னை பூபதியின் நினைவு தினம் நேற்று மதியம் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாலும் நினைவுகூரப்பட்டது.

அன்னை பூபதியின் 29ஆவது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது.

இதேவேளை, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர்ந்தும் 46ஆவது நாளாகநேற்றும் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Top