சசிகலா, தினகரன் கட்சி பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும்: கே.பி.முனுசாமி பேட்டி

ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த கே.பி.முனுசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து வருகிறார். ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை மற்றும் சசிகலா குடும்பத்தை வெளியேற்ற வேண்டும் என போராடினோம். கோரிக்கைகளில் முதல் வெற்றி தொடர் வெற்றியாக அமைய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். தினகரன் நியமனம் தொடர்பான பிரமான பத்திரங்களை திரும்ப பெற வேண்டும். சசிகலா, தினகரன் கட்சி பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும். சசிகலாவால் நியமிக்கப்பட்டவர்கள் கட்சியிலிருந்து நீக்கி அறிக்கை வெளியிட வேண்டும். நீக்கப்பட்டவர்களுடன் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது என்ற அறிக்கையும் வெளியிட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Related posts

Top