பேச்சுவார்த்தைக்காக அமைக்கப்பட்ட குழுவுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை

பேச்சுவார்த்தைக்காக அமைக்கப்பட்ட குழுவுடன் முன்னாள் முதல்-அமைஅச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அ.தி.மு.க. கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை மீட்பதற்காக சசிகலாவின் அ.தி.மு.க. அம்மா அணியினரையும் ஓ.பன்னீர்செல்வத்தின் அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியினரையும் இணைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த இணைப்பு பேச்சு வார்த்தைக்காக அ.தி.மு.க. அணியில் வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் 7 பேர் கொண்ட குழுவும், அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியில் கே.பி.முனுசாமி தலைமையில் 7 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது.

இரு அணிகளும் நேற்று ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் சந்தித்து பேச ஏற்பாடு செய் யப்பட்டிருந்தது. ஆனால் பேச்சுவார்த்தை தொடங் குவதற்கு சில மணி நேரத் துக்கு முன்பு இரு தரப்பினரிடையே மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசா ரணைக்கு பரிந்துரைக்க வேண்டும். அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா குடும் பத்தினரை முழுமையாக விலக்க வேண்டும். இந்த இரு நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வர முடியும் என்று ஓ.பி.எஸ். அணியினர் திட்டவட்டமாக அறிவித்தனர்.இந்த நிபந்தனைகளை சசிகலா தரப்பு அ.தி.மு.க. அம்மா அணியினர் ஏற்க மறுத்து விட்டனர். இதனால் அ.தி.மு.க. இரு அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை தொடங்காமலே தோல்வியில் முடிந்து விட்டது.

இரு அணிகளையும் இணைக்க ஒரு பக்கம் சமரச முயற்சிகள் நடந்த நிலையில், மற்றொரு பக்கம் அதை சீர்குலைக்கும் வகையில் தலைவர்களின் பேச்சு அமைந்தது. முதலில் அமைச்சர் ஜெயக்குமார், தம்பித்துரை எம்.பி. ஆகி யோரால் சர்ச்சை கிளம் பியது.நேற்று அமைச்சர் சி.வி. சண்முகம் பேசியது முரண் பாடாக அமைந்தது. மேலும் அ.தி.மு.க.வின் நாளேடான “நமது எம்.ஜி.ஆர்” பத்திரிகை யில் சசிகலா, டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக வந்த செய்திகள், ஓ.பி.எஸ். அணியினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

சசிகலா தரப்பு அ.தி.மு.க. அம்மா அணியினர் மீது நம்பகக்தன்மை இல்லாத நிலையை அவர்களிடம் உருவாக்கியது. இதுதான் இரு அணி இணைப்பு முயற்சியில் விழுந்துள்ள மிக முக்கிய முட்டுக்கட்டையாக கருதப்படுகிறது.

தற்போது இரு அணி களிடம் நிலவும் முட்டுக் கட்டைகள் நிவர்த்தி செய்ய முடியாதவைகளாக உள்ளன. குறிப்பாக ஓ.பி.எஸ். அணியினரின் நிபந்தனைகளால் எடப்பாடி அணியினர் மவுனமாகி விட்டனர். நிபந்தனை இல்லாமல் பேச வந்தால், நாங்களும் பேச தயாராக இருக்கிறோம்” என்று கூறி முடித்து விட்டனர்.

நேற்று மதியம் இரு அணி தலைவர்களும் மாறி, மாறி ஆவேசமாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப் போது தங்களது உறுதியான முடிவை தெரிவித்து விட் டனர்.இதனால் இரு அணி கள் இணைப்பு பேச்சு வார்த்தை அப்படியே முடங்கிப் போனது. நேற்று மதியத்துக்குப் பிறகு இரு அணி தலைவர்களும் இணைப்பு தொடர்பாக எந்த முயற்சிகளிலும் ஈடு படவில்லை. இதனால் அ.தி. மு.க. இணைப்பு முயற்சியில் தற்போது எந்தவித முன்னேற்றமும் இல்லை.

இந்த நிலையில் பேச்சுவார்த்தைக்காக அமைக்கப்பட்ட குழுவுடன் ஓ.பன்னீர்செல்வம் கிரீன் வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன்,கே.பி.முனுசாமி,பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

Top