பிரித்தானிய தூதுவரை சந்தித்தார் சம்பந்தன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும், சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டோரிசுக்கும் இடையில் நேற்று முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

எதிர்க்கட்சித் தலைவரின் அதிகாரபூர்வ செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதில் அரசியலமைப்பு மாற்றம், காணிகள் விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சந்திப்பில் இரா.சம்பந்தனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும், பிரித்தானிய தூதுவருடன், தூதரக அதிகாரிகள் இருவரும் கலந்து கொண்டனர்.

Related posts

Top