இனியாவது ஜ.நா திருந்திக்கொள்ளவேண்டும் – விக்கி

ஐக்கிய நாடுகள் சபை திறமையாக செயற்பட்டுருந்தால் போரின் இறுதி கட்டத்தில் பல்லாயிரக்கணக்காணோர் இறந்திருக்க மாட்டார்கள் என ஐநா வின் அபிவிருத்தி செயற்பாட்டிற்கான அதிகாரியிடம் தெரிவித்ததாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இன்றைய தினம் முற்பகல் 10 மணியளவில் முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கும் ஐநா வின் அபிவிருத்தி செயற்பாட்டிற்கான அதிகாரிக்கும் இடையில் சந்திப்பிலேயே மேற்குறித்த விடையம் தொடர்பில் சுட்டிக்காட்டியதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

ஐக்கிய நாடுகள். சபையானது மாகாண அரசுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளாது மத்திய அரசுடன் மட்டும் தொடர்புகளை வைத்துகொண்டு செயற்படுகிறார்கள். இதனை ஏற்று கொள்ள முடியாது ஏற்கனவே மத்திய அரசு மாகாணத்தை புறந்தள்ளி தாம் நினைத்ததை செயற்படுத்தி வருகின்றது. எனவே அதனை ஏற்க முடியாது. இனிவரும் காலத்திலாவது ஐ நா இதனை திருத்தி மாகாண அரசுடனும் தொடர்புகளை பேணவேண்டும்.

குறிப்பாக 2009ம் ஆண்டு போர் இடம்பெற்ற காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் சபை சிறப்பாக செயற்பட்டு மத்திய அரசின் செயல்பாட்டில் தலையிட்டிருந்தால் இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் இறக்காது காப்பாற்றி இருக்கலாம் இனிவரும் கால்களிலும் அவ்வாறான ஒரு தவறை ஐ நா விடக்கூடாது என தான் வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

Related posts

Top