அமெரிக்க போர்க்கப்பலுடன் இணைந்த தென்கொரிய கப்பல்கள் – தொடரும் பதற்றம்

வட கொரியாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில், அமெரிக்க மற்றும் தென்கொரிய போர்க்கப்பல்கள் மேற்கு பசுபிக் கடற்பரப்பில் இணைந்துள்ளன.

ஜப்பானிலுள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது அணுவாயுத தாக்குதல் மேற்கொள்ளப்படும் என்ற வடகொரியாவின் எச்சரிக்கையை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த போர்க்கப்பல்கள் தொடர்பிலான காணொளிகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளன.

கொரிய தீப கற்பத்தில் எந்நேரமும் போர் வெடிக்கலாம் என்ற அச்சுறுத்தல் நிலவி வருகிறது.

அத்துடன் 3 ஆம் உலகபோர் தொடங்குமா என்ற அச்சம் சர்வதேசத்தின் மத்தியில் காணப்படுகிறது.

இந்த நிலையில் குறித்த பதற்றங்களை அதிகரிக்கும் வகையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா இணைந்து பயிற்சி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

இதேவேளை, கொரியா பிராந்தியத்தில் வடகொரியா எந்நேரத்திலும் ஏவுகணை சோதனையை நடத்தலாம் என்ற அச்சம் நிலவிவருகின்ற நிலையில், அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பல் கார்ல் வின்சன் தலைமையில் கூட்டுபயிற்சிகளை முன்னெடுப்பது தொடர்பில் தென்கொரியா வொஷிங்டனுடன் கடந்த மாதம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது.

இந்த நிலையில், தென்கொரியா மற்றும் ஜப்பான் விமான படைகளுடன் பயிற்சிகளில் ஈடுபட்டதன் மூலம் கொரிய தீபகற்பத்தை அணுவாயுத யுத்தத்திற்கு அமெரிக்கா தள்ளியுள்ளது என வடகொரியா குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Top