பிரான்ஸின் ஒரு பகுதியை அழிக்கும் அளவுக்கு ஏவுகணை!

உலகின் மற்ற நாடுகளுக்கு எச்சரிக்கை தரும் வகையில் சக்தி வாய்ந்த ஏவுகணையை தயாரித்துள்ள ரஷ்யா அதை அடுத்த ஆண்டு வெளியிடவுள்ளது. ரஷ்யா ஏற்கனவே Satan என்னும் சக்தி வாய்ந்த ஏவுகணையை தயாரித்து வெளியிட்டு உலக நாடுகளை மிரள செய்தது.

இந்நிலையில், Satan 2 என குறிக்கும் வகையில் RS-28 Sarmat என்னும் உலகின் கனமான மற்றும் சக்திவாய்ந்த ஏவுகணையை தயாரித்து வருகிறது. Sarmat ஏவுகணை இதுவரையில்லாத அளவில் 11,000 மைல்கள் போகும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஏவுகணை பிரான்ஸின் ஒரு பகுதியையே அழிக்கும் அளவுக்கு திறன் கொண்டதாகும். தொழில்நுட்பத்தை பொருத்தவரையில் உலகின் பெரிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பாக கருதப்படும் தென் கொரியாவின் THAADஐ விட Sarmat சிறந்தவகையில் தயாரிக்கபட்டுள்ளது.

இந்த ஏவுகணை அடுத்த வருடம் வெளியிடப்படவுள்ளது. இது குறித்து ரஷ்யாவின் ராணுவ அதிகாரி Alexei Leonkov கூறுகையில், Sarmat ஏவுகனை தயாரிப்பின் மூலம் ரஷ்யா ஜனாதிபதி புடினின் எதிரிகள் அவரை கண்டு பயப்படுவார்கள்.

அமெரிக்க ராணுவத்தை எளிதாக இந்த ஏவுகணை ஜெயித்து விடும் என கூறியுள்ள Alexei, இந்த ஏவுகணையில் 10லிருந்து 15 வரையிலான ஆயுதங்களின் பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். ஒவ்வொரு பாகங்களும் 750 கிலோ டன் கொண்ட பிரம்மாண்ட எடையில் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

Top