கொரிய வளைகுடாவில் ஏற்பட்டுள்ள பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

வடகொரிய அதிபர் கிம் ஜொங் ஹன்னை படுகொலை செய்வதற்கு அமெரிக்க மற்றும் தென்கொரிய உளவுத்துறையினர் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக வடகொரியா குற்றம்சாட்டியுள்ள நிலையிலேயே கொரிய வளைகுடாவின் நிலமை மோசமடைந்துள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் உளவுத்துறையான சீ.ஐ.ஏ மற்றும் தென்கொரியாவின் உளவுத்துறை ஆகியோரின் ஆதரவுடன் வடகொரியாவிற்குள் பயங்கரவாதிகள் ஊடுறுவியுள்ளதாக வடகொரிய அரச தொலைக்காட்சி இன்று வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கிம் என்ற நபரையே வடகொரிய அதிபரை இரசாயண ஆயுதத் தாக்குதலொன்றை நடத்தி படுகொலை செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வடகொரிய தேசிய பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் இருந்தபோது கிம் என்ற நபரை பெருமளவு நிதியை சன்மானமாகக் கொடுத்து தமது பக்கம் ஈர்த்துக்கொண்டுள்ள தென்கொரிய உளவுத்துறையினர் தற்போது அந்த நபரை தமது அதி உயர் அரச தலைவரை படுகொலை செய்வதற்காக நாட்டுக்குள் அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

எனினும் இந்த பயங்கரவாதி கண்டுபிடிக்கப்பட்டால் எந்தவித தயவு தாட்சண்யமும் இன்றி அழிக்கப்படுவார் என்றும் வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரிய வளைகுடாவில் பதற்றம் நிலவும் நிலையில் வெளியிடப்பட்டுள்ள இந்தத் தகவல் மேலும் நிலமையை மோசமடையச் செய்துள்ளது.

வடகொரியா தனது ஆறாவது அணு ஆயுதப் பரிசோதனையை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்காவும் தென்கொரியாவும் குற்றம்சாட்டி வருவதுடன் கொரிய வளைகுடாவிற்கு அமெரிக்கா தனது தாக்குதல் போர்க் கப்பல் படையணியான கார்ல் வின்சனையும் அனுப்பி வைத்துள்ளது.

அது மாத்திரமன்றி அணு ஆயுதத் தாக்குதலை நடத்தும் திறன்கொண்ட நீர்மூழ்கிக்கப்பலையும் கொரிய வனைகுடாவில் நிறுத்தியுள்ள அமெரிக்கா தென்கொரியா மற்றும் ஜப்பானுடன் இணைந்து தொடர்ச்சியாக போர்ப் பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது.

கடந்தவாரம் தென்கொரியாவில் நிலைநிறுத்திய தாட் ஏவுகணைப் பாதுகாப்புக் கட்டமைப்பையும் இயங்கு நிலைக்கு கொண்டுவந்துள்ளதால் வடகொரியா கடும் ஆத்திரம் அடைந்துள்ளதுடன் அமெரிக்கா மற்றும் தென்கொரியா மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்து வருகின்றது.

வடகொரியாவின் அணு ஆயுதத் திட்டத்தை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி வருகின்றார்.

எனினும் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளின் எச்சரிக்கைகளையும் மீறி கடந்த சனிக்கிழமை வடகொரியா மற்றுமொரு பெலஸ்ரிக் ஏவுகணைப் பரிசோதனையை நடத்தியது. எவ்வாறாயினும் குறித்த ஏவுகணைப் பரிசோதனை வெற்றியளிக்கவில்லை.

இந்த நிலையில் வடகொரியாமீது புதிய கட்டப் பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்த யோசனை நேற்றைய தினம் அமெரிக்க காங்கிரஸ் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்போது வடகொரியாவுடன் சட்டவிரோதமாக வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களை இலக்குவைக்கப்படும் என்றும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ரெக்ஸ் ரிலர்சன் தெரிவித்துள்ளார்.

Related posts

Top