ஆப்கானின் காலா இ ஜால் மாவட்டம் தலிபான் வசம் வீழ்ந்தது!

ஆப்கானிஸ்தான் குண்டூஸ் மாகாணத்தில் உள்ள காலா இ ஜால் மாவட்டத்தை தலிபான் தீவிரவாத அமைப்பு கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த இரு தினங்களாக தலிபான் தீவிரவாதிகளுக்கும் அரசபடைகளுக்கும் இடையில் தீவிரமடைந்துவரும் உக்கிர மோதலின் முடிவில் மேற்குறித்த மாவட்டம் தலிபான் வசம் வீழ்ந்துள்ளதாக தலிபான் தீவிரவாத அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜபிகுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இதனை முற்றுமுழுவதுமான மறுத்துள்ள துணை பொலிஸ் அதிகாரி கெர்னல் சபார் மொஹமட், இப்பகுதியில் தொடர்ந்தும் மோதல் இடம்பெற்றுவருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் நிலைநிறுப்பதப்பட்டுள்ள அமெரிக்க துருப்புகளுக்கு பக்கபலமாக, மேலும் சில அமெரிக்க துருப்புக்களை அனுப்ப அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.

Top