தான்சானியாவில் பேரூந்து விபத்து – 33 மாணவர்கள் பலி

ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் மாணவர்கள் உட்பட 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

அரூஸா மாநிலத்திலுள்ள ஆரம்ப பாடசாலை மாணவர்களே இந்த விபத்தின் போது உயிரிழந்துள்ளனர்.

நேற்றைய தினம் அருஸா மாநில ஆரம்ப பாடசாலை மாணவர் பரீட்சை எழுதுவதற்காக சென்று பொண்டிருந்தனர்.

இதன் போது மியாட்டு மாநிலத்திலுள்ள மிலோரோ நதிக் கரையோரம் குறித்த பேரூந்தானது கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் இரண்டு ஆசிரியர்களும் 33 மாணவர்களும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் அனைவரும் 12 தொடக்கம் 13 வயதிற்கிடைப்பட்டவர்கள் என அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்ததாலேயே குறித்த பேரூந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Top