மண்டபம் முகாமில் ஈழ அகதிகள் மீது பொலிசார் தாக்குதல்

தமிழ்நாட்டில் மண்டபத்தில் உள்ள சகாயமாதா ஆலயத்தின் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது போதையில் வந்த பொலிசார் அகதி பெண்கள் மீது தகாத முறையில் நடந்துள்ளனர்.

இந்த அநியாயத்தை தட்டிக் கேட்ட அகதி இளைஞர்கள் மீது பொலிசார் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதுமட்டுமன்றி தங்கள் மீது அகதி இளைஞர்கள் தாக்குதல் நடத்தியதாக பொய் வழக்கு பதிவு செய்து அகதி இளைஞர்களை கைதும் செய்துள்ளனர்.

கடந்த வருடம் இதே மண்டபம் அகதி முகாமைச் சேர்ந்த பெண் ஒருவர் நான்கு பொலிசாரினால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார். அவ் வழக்கு இராமநாதபுரம் பெண்கள் காவல் நிலையத்தில் உள்ளது. இதுவரை அது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவும் இல்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவுமில்லை.

இந்திய அரசு பாகிஸ்தானில் இருந்து வந்த அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குகின்றது. ஆனால் 34 வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில் இருக்கும் ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்க மறுக்கிறது.

இந்தியாவில் பிற மாநிலங்களில் இருக்கும் மற்ற அகதிகள் கல்லூரியில் படிக்கவும் தொழில் புரியவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் இருக்கும் ஈழத் தமிழ் அகதிகளுக்கு மட்டும் கல்லூரியில் படிக்க மட்டுமன்றி வாகன லைசன்ஸ் எடுக்கக்கூட அனுமதி மறுக்கப்படுகிறது.

குடியுரிமை வழங்காவிட்டாலும் பரவாயில்லை. மானத்தோடு கௌரவமாக வாழவாவது அனுமதிக்கலாமே. அதைவிடுத்து அகதிப் பெண்கள் என்றால் கேட்பதற்கு யாருமற்ற அனாதைகள் என்ற நினைப்பில் பாலியல் வல்லுறவு புரிய நினைப்பது என்ன நியாயம்?

பொலிசாரின் அராஜகதம்தை தட்டிக் கேட்டால் அவர்களை புலிகள் என முத்திரை குத்தி சிறப்புமுகாமில் அடைக்கும் கியூ பிரிவு பொலிசார் ஒருபுறம். அகதிகளை கொத்தடிமைகள் போல் நடத்தும் வருவாய்துறை அதிகாரிகள் மறுபுறம் என இரண்டுக்கும் நடுவில் சிக்கி அகதிகள் பட்ட துன்பங்கள் போதும்.

அகதிகள் தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு கோரி மனுக் கொடுத்தும் இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அகதிகள் தாங்களாகவே வள்ளத்தில் வரமுயன்றாலும் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கிறது அரசு.

வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு தமிழ் அகதிகளை மட்டும் வாழவும் விடாமல் சாகவும் விடாமல் கொடுமை செய்கிறது. இந்த அவலத்திற்கு எப்போதூன் விடிவு பிறக்குமோ?

தனது நாட்டில் தமிழ் அகதிகளை அடைத்து வைத்து கொடுமை செய்யும் பிரதமர் மோடி அன்பை போதித்த புத்தர் ஜெயந்தி விழாவிற்கு வர என்ன தகுதி இருக்கு?

பாவம் புத்தர். அவரை இதைவிட கேவலப்படுத்த யாராலும்

பொலிசாரின் அராஜகம் ஒருபுறம் என்றால் மறுபுறத்தில் ஊடகங்களின் வேசைத்தனம் மறுபுறம். கடந்த வருடம் மண்டபம் முகாமில் அகதிப் பெண் 4 பொலிசாரினால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட செய்தியை ஒரு சில ஊடகங்களைத் தவிர எல்லா ஊடகங்களும் பிரசுரம் செய்யாமல் மறைத்தன. இப்போதும்கூட போதையில் வந்த பொலிசாரின் பாலியல் சேட்டையை தட்டிக் கேட்ட இளைஞர்களை “கடமையில் இருந்த பொலிசார் மீது இளைஞர்கள் தாக்குதல்” என்று பொலிஸ் கொடுத்த செய்தியை வாந்தி எடுத்துள்ளன.

இந்திய பத்திரிகைகள்தான் உண்மையை மறைத்து பொலிசார் கொடுக்கும் பொய் செய்தியை பிரசுரம் செய்கின்றன என்றால் புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் தமிழ் தேசிய ஊடகம் என தம்மை அழைத்துக்கொள்ளும் ஊடகங்கள்கூட உண்மையை பிரசுரம் செய்ய தயங்குகின்றன.
என்னே கொடுமை இது?

Related posts

Top