குர்திஸ் போராளிகளிற்கு ஆயுதம் வழங்க அமெரிக்கா தீர்மானம்- துருக்கி கடும் எதிர்ப்பு

துருக்கியின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியிலும் குர்திஸ் வைஜேபி போராளிகளிற்கு ஆயுதங்களை வழங்குவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது.
ஐஎஸ் அமைப்பிடமிருந்து ரக்கா நகரை கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள குர்திஸ் பேராளிகளை மேலும் வலுப்படுத்துவதற்காகவே அமெரிக்கா அவர்களிற்கு ஆயுதங்களை வழங்க தீர்மானித்துள்ளது.
டிரம்ப் இதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ரக்காவில் தெளிவான வெற்றியை பெறும் நோக்கத்துடனேயே குர்திஸ் அமைப்பிற்கு ஆயுதங்கள் வழங்கப்படுவதாக பென்டகன் தெரிவித்துள்ளது.துருக்கியின் கரிசனைகளை கருத்தில் கொண்டுள்ளதாகவும் பென்டகன் தெரிவித்துள்ளது.
இதேவேளை அமெரிக்காவின் இந்த முடிவை துருக்கி கடுமையாக விமர்சித்துள்ளது.

ஐஎஸ் அமைப்பிற்கு எதிரான போராட்டத்திற்காக குர்திஸ்போராளி குழுவிற்கு ஆயுதங்களை வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என துருக்கி தெரிவித்துள்ளது.துருக்கியின் இருப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் பயங்கரவாத அமைப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என அந்த நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அரசாங்கம் தனது இந்த முடிவை கைவிடும் என எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Top