எமது அடுத்த தலைமுறைக்கு அகதி வாழ்க்கையை அன்பளிப்பாக கொடுக்க போகின்றோமா அல்லது போராடப் போகின்றோமா ? செல்வன் பா.லக்சன் (காணொளி இணைப்பு)

யேர்மனியில் 3 வது நாளாக நடைபெறும் விழிப்புணர்வு ஊர்திப் பயணத்தில் மதியம் Stuttgart நகரை தொடர்ந்து மாலை 6 மணிக்கு Karlstruhe நகரத்தில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வில் கலந்துகொண்ட செல்வன் பா. லக்சன் அவர்கள் எமது அடுத்த தலைமுறைக்கு அகதி வாழ்க்கையை அன்பளிப்பாக கொடுக்க போகின்றோமா அல்லது போராடப் போகின்றோமா ? என மேற்கண்டவாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

பல்லின மக்கள் நடமாடும் பகுதியில் நடைபெற்ற தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் பதாதை கண்காட்சியில் கலந்துகொண்ட எமது உறவுகள் துண்டுப்பிரசுரங்களையும் வழங்கியதோடு வேற்றின மக்களோடு கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டனர். இறுதியாக Karlstruhe நகரபிதாவாகிய மதிப்புக்குரிய Frank Mentrup அவர்களுக்கும் தமிழின அழிப்புக்கு நீதி கோரும் மனு அனுப்பி வைக்கப்பட்டது.

விழிப்புணர்வு ஊர்திப் பயணம் நாளைய தினம் காலை 10 மணிக்கு Landau (Marktstr )நகரையும் மாலை 4 மணிக்கு Frankfurt (Konterablarwache )நகரையும் சென்றடையுள்ளது.

Related posts

Top