வடக்கு முதலமைச்சரை மோடியிடம் அறிமுகப்படுத்திய மைத்திரி: மோடி கூறிய பதில் என்ன தெரியுமா..?

சர்வதேச வெசாக் தினத்தை ஆரம்பித்து வைப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறீலங்கா சிறிசேன ஜனாதிபதி மாளிகையில் இராப்போசன விருந்தளித்தார்.

இதில் சிறீலங்கா  ஜனாதிபதியுடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர், அமைச்சர்கள் சிலர் மற்றும் சிறுபான்மை கட்சிகள் சார்பில் எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், அமைச்சர் பௌசி, இந்திய பிரதமருடன் ஜெய் சங்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதன்போது சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியப் பிரதமரிடம் ‘வடமாகாண முதலமைச்சரும் வந்திருக்கிறார் என அவரை அறிமுகப்படுத்திய போது, இந்திய பிரதமர் நான் ஏற்கனவே அவரை சந்தித்திருந்தேன். அவருடன் பல விடயங்கள் பேசினேன். அவை ஞாபகம் இருக்கிறது’ எனத் தெரிவித்தார்.

Related posts

Top