இலங்கை தமிழர்களின் நலன் காக்க அழுத்தம் கொடுப்போமாம்-சுஷ்மா

இலங்கை தமிழர்களின் நலன்களைக் காக்க, அந்நாட்டு அரசாங்கத்துக்கு, இந்தியா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்றேக்கழகத்தின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டொக்டர் வேணுகோபாவுக்கு, வெளியுறவுத் துறை அமைச்சர் சுவரொஜ் கடிதம் எழுதியுள்ளார்.

மக்களவையில், கடந்த மார்ச் 24ஆம் திகதி பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களை, அவையின் கவனத்துக்குக் கொண்டுவரும் நேரத்தில், அ.தி.மு.க குழுத் தலைவரும் திருவள்ளுவர் தொகுதி உறுப்பினருமான டொக்டர் பி.வேணுகேபால், இலங்கை தமிழர்களின் நலன்கள் தொடர்பாக பேசினார்.

அப்போது, அவர் சுட்டிக்காட்டிய விடயங்களுக்கு பதிலளிக்கும் வகையில், சுஷ்மா சுவராஜ், அண்மையில் அவருக்கு எழுதியுள்ள கடிதம் வருமாறு: “இலங்கை தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பது தொடரபான அறிக்கையை, மாநிலங்களவையில் கடந்த மாமச் 23ஆம் திகதி கேள்வி நேரத்தின் போது வாசித்தேன்.

“நிகழாண்டு பெப்ரவரி 27 முதல் மார்ச் 24ஆம் திகதி வரை நடைபெற்ற, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் (34ஆவது) கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் குறித்தும், இலங்கை தொடர்பான மனித உரிமைகளுக்கான ஐ.நா தூதரக அறிக்கை குறித்தும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தேன்.

“இந்த விடயத்தில் மனித உரிமைகள் பாதுகாப்பும் ஊக்குவிப்பும், திடமான மற்றும் கூட்டு அர்ப்பணிப்பு மூலம் எடுத்துச் செல்ல முடியும் என்ற உறுதியான நம்பிக்கையுடன், ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியா அணுகி வருகிறது.

“மனித உரிமைகளுக்கான பாரம்பரிய ஈடுபாடு, மதிப்பீடுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கவுன்சிலின் அனைத்துக் கூட்டத்திலும் இந்தியா ஆர்வத்துடன் பங்கேற்றது. தனது அரசியல் தலைமையின் பலம், மதிநுட்பம், மக்கள் அதரவு ஆகியவற்றுடன் உண்மையான சமரசம் மற்றும் மேம்பாட்டை இலங்கை எட்டும்.

“இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடான இலங்கையின், தமிழ் மக்கள் உட்பட அந்நாட்டின் அனைத்து குடிமக்களின் நலன்களை பாதுகாக்க அந்த நாடு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும்.

“இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது முதல், இந்தியாவின் கவனம் அங்குள்ள தமிழர்கள் நலன் மீதே உள்ளது. இலங்கை தமிழர்களின் நலன்களை பாதுகாக்க, சர்வதேச சமூகத்துக்கு அளித்துள்ள உறுதிமொழியை, இரு தரப்பு பேச்சுவார்த்தையின் போது, இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி அழுத்தம் கொடுத்து வருகிறது.

“அந்த அடிப்படையில், உள்நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு வீட்டு வசதி, கல்வி தொலைத் தொடர்புவசதி, வாழ்வாதாரம் மீட்டெடுப்பு போன்றவை சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டும் வருகின்றன” என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Top