கிளிநொச்சியில் வான் குடைசாய்ந்து விபத்து

கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயதிற்கு முன்னால் கயஸ்ரக வான் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் வாகன சாரதி சிறு காயங்களுக்குள்ளான நிலையில் உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (திங்கட்கிழமை) காலை கிளிநொச்சி திருநகர் பகுதியில் இருந்து ஏ9 வீதி ஊடாக இரணைமடு நோக்கி சென்றுகொண்டிருந்தபோது வீதியை கடக்க முயன்ற நாயை விலத்திச்செல்ல முற்பட்டவேளை வேகக்கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்ததிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் வான் பெரும்சேதங்களுக்கு உள்ளானதுடன் விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

Top