மோடி கலந்துகொண்ட நிகழ்வில் மர்மநபர்…கூரிய ஆயுதத்துடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்

கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற சர்வதேச வெசாக் தின நிகழ்வில் இந்திய பிரதமர் கலந்துக்கொண்டிருந்த போது இஸ்லாமிய மதத் தலைவர் போல் ஆடையணிந்து அந்த மண்டபத்திற்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் மண்டபத்திற்குள் வரும் போது அவர் இஸ்லாமிய தலைவர்கள் வந்த நுழைவாயிலில் செல்லாது வேறு நுழைவாயிலில் சென்றதுடன் அவரிடம் இருந்த அழைப்பிதழ் கடிதமும் அவருக்குறியதல்ல. இதன்போது அவரிடமிருந்து கூரிய கத்தரிக்கோல் ஒன்றும் இருந்துள்ளது. இவ்வேளையில் சந்தேகம் கொண்ட பிரபுக்கள் பாதுகாப்பு பிரிவினர் அவரை கைது செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் மதத்தலைவர் அல்லவெனவும் தெரியவந்துள்ளது. எதற்காக அவர் அங்கோ உள்ளே நுழைய முயற்சித்தார் என விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் அவரை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து எதிர்வரும் 19ஆம் திகதி வரை அவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related posts

Top