பிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவாக இரத்த தான முகாம்

தமிழ் இனப்படுகொலை 8 ஆண்டுகள் கடந்தும் அன்றைய ஈழத்தமிழர்களின் அவலக்குரல் எமக்கு மட்டுமே கேட்கிறது
நீதி கிடைக்காமல் இருக்கும் எம்மினத்திற்காக பிரித்தானிய மண்ணில் தமிழர் ஒருங்கிணைப்பு குழு பிரித்தானியா முன்னேற்பாட்டில்ஈழமக்கள் ஒன்றிணைந்தது 16/05/2016 அன்று பிரித்தானியாவில் அமைந்துள்ள Edgware community Hospital எனும் இடத்தில் குருதிதானம் வழங்கப்பட்டது.

2009 ல் சிங்கள அரசின் திட்டமிட்ட தமிழ் இனத்தின் இனவழிப்பு இ குருதிகள் அருவியாய் ஓட எம் இனம் அளிக்கப்பட்டது. மறக்க முடியுமா மே 18? ஆண்டுகள் எட்டானாலும் தொலைத்த குடும்பங்கள் , காணாமல் போன உறவுகள் , காணாமல் ஆக்கப்பட்ட சொந்தங்கள் , மீட்க முடியாமல் இருக்கும் எம்மினத்தின் நிலங்களையும் எமது உரிமைகளையும் எம்மால் மறக்க முடியாது . முடியாத வலிகளோடுஅமைந்தது இந்த இரத்த தான முகாம்.

Related posts

Top