விடுதி முற்றுகை நால்வர் கைது

கிளிநொச்சி விநாயகர்புரம் பகுதியில் இயங்கி வந்த சமூக சீர்கேட்டு நிலைமையுடனான விடுதி ஒன்றை முற்றுகையிட்ட பொலிஸார் சந்தேகத்தின் பேரில் நான்கு பெண்களைக் கைது செய்துள்ளனர்.

மேற்படிப் பகுதியில் சீர்கேடான நிலையில் விடுதியொன்று இயங்கிவருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றை அடுத்து நேற்றுப் புதன்கிழமை அவ் வீட்டினைப் பொலிஸார் முற்றுகையிட்டனர்.

இதன்போது அவ்வீட்டில் தங்கியிருந்த நான்கு பெண்களையும் கைது செய்த பொலிஸார் வீட்டினைச் சீல் வைத்துள்ளனர். இது தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

Top