200க்கும் மேற்பட்ட இலங்கை இணையங்களை முடக்கிய தமிழ் இணைய ஊடுருவலாளா்கள்!

200க்கும் மேற்பட்ட இலங்கை இணைய தளங்களில் இனப்படுகொலை படங்கள் மற்றும் புலிக்கொடி ஏற்றி தமிழ் இணைய ஊடுருவலாளா்கள் மீண்டும் நிரூபித்துள்ளர் இதில் சென்று பார்வையிடலாம். http://mirror-h.org/search/hacker/8172/

ஈழம் என்பது இதயத்திலேற்றிய நெருப்பு என்று மீண்டும் நிரூபித்துள்ள தமிழ் இணைய ஊடுருவலாளா்கள்.Screenshot_25
மனித நாகரீகத்தின் மனச்சாட்சியை உலுப்பிய ஒரு விடுதலையை வேண்டிய இனத்தின் மீது இனச்சுத்திரிகரிப்பை நோக்காக கொண்டு கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவழிப்பு நடந்து 8 ம் ஆண்டு நினைவை பலரும் பலவழிகளில் அனுசரிக்கும் போது அடையாளம் காண முடியாத இணைய ஊடுருவலாளா்கள் 200க்கும் மேற்பட்ட இலங்கை இணைய தளங்களில் தமது கைவரிசையை காட்டியுள்ளனா். இதன் மூலம் மௌனிக்கப்பட்டது ஆயுதங்கள் மட்டுமே இலட்சியம் அல்ல என்று உலகின் செவிகளுக்கு ஓங்கியறைந்து அறிவித்துள்ளார்கள் போலுள்ளது.

நன்கு திட்டமிடப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டு அரசசார்பு மற்றும் ஏனைய இணையத்தளங்கள் மீது நடத்தப்பட்ட இந்த இணையவழி தாக்குதலானது உலக அரங்கில் அரசாங்கத்தின் நன்மதிப்பை குறைக்கும் ஒரு நடவடிக்கை என்பதில் மாற்றுக்கருத்து இருக்கப்போவதில்லை.

அண்மைக்காலமாக பொருளாதார அனுகூலங்களை நோக்காக கொண்டு நடத்தப்பட்டு வரும் இணையவழி ஊடுருவல்களுக்கு மத்தியில் இவ்வகையான தாக்குதல்கள் உலகின் கவனத்தினை மீண்டும் ஒருமுறை தமிழ்மக்கள்பால் திருப்பும் என்பதில் சந்கேமில்லை. அதே வேளை இவ்வாறான தாக்குதல்கள் தொடரும் பட்சத்தில் அது அரசாங்கத்திற்கு ஒரு நெருக்கடியையும் உண்டுபண்ணும் என்பது அவதானிகளின் கருத்தாகும்.

Top