‘தமிழீழம் மலர்வது தவிர்க்க முடியாதது: எமக்கான காலம் கனியும்!’ வட அயர்லாந்து தலைநகரில் பிரமாண்டமான வீதியோரப் பதாகை

‘தமிழீழம் மலர்வது தவிர்க்க முடியாதது: எமக்கான காலம் கனியும்’ என்று பொருள்படும் ஐரிஸ் (Irish) மொழியிலான வாசங்களையும், தமிழீழ வரைப்படத்தையும், பெண் புலிவீராங்கனை ஒருவரின் ஓவியத்தையும் கொண்ட பிரமாண்டமான வீதியோரப் பதாகை வட அயர்லாந்து தலைநகர் பெல்பாஸ்ற்றில் (Belfast) வைக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை வட அயர்லாந்தின் பெல்பாஸ்ற் (Belfast), டெரி (Derry) ஆகிய நகரங்களில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் நடைபெற்றிருந்த நிலையில் பெல்பாஸ்ற் நகரில் மக்கள் அதிகமாகப் பயணிக்கும் வீதியோர நடைபாதையில் பிரமாண்டமான பதாகை வைக்கப்பட்டுள்ளமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Top