நினைவேந்தலை ஒழுங்குபடுத்திய அருட்தந்தைக்கு மீண்டும் விசாரணை!

முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் கிறிஸ்தவ மதகுரு ராஜன் அருட்தந்தையிடம் இன்றைய தினமும் விசாரனைக்காக வவுனியாவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்

மக்கள் கொல்லப்பட்டதை நினைவு கூரும் வகையில், இறுதித் தாக்குதல் நடந்த கிழக்கு முள்ளிவாய்க்கால், சின்னப்பர் கத்தோலிக்க தேவாலயம் அருகிலுள்ள பகுதியில், நேற்று காலையில் நினைவேந்தல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

பாதிரியார் இராஜேந்திரன் எழில்ராஜன் என்பவர் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார்.

நினைவேந்தலுக்காக, படுகொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணை அவரின் கணவர் தூக்கிச்செல்வதையும் அருகில் ஒரு குழந்தை அச்சத்தோடு நின்றுகொண்டிருப்பதையும் சித்தரிக்கும் சிலை ஒன்றும் அங்கு வைக்கப்பட்டிருந்தது.

மேலும் சிங்களப்படையின் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட 500 கற்களும் அங்கு வைக்கப்பட்டிருந்தன.

இப்படியான நினைவுச்சின்னத்தை அனுமதிப்பதால் இனப்படுகொலை குறித்து மக்களின் உணர்வுகளைக் கிளறிவிடும் என்பதால், முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தடை கோரி வழக்கு பதியப்பட்ட்டு தடை விதிக்கப்பட்டது இவ் நிலையிலேயே அருட்தந்தை விசாரணைக்காக வவுனியாவிற்குஅழைக்கப்பட்டுள்ளார்.

Top