தமிழகத்தில் ஈழத்தமிழர் 16 பேர் மீது வழக்கு பதிவு! பிணை எடுக்கும் முயற்சியில் முத்துக்குமார் பாசறை

கடந்த 6 தேதி தமிழகத்தின் மண்டபம் முகாமில் நடந்த மாதா கோவில் திருவிழாவில் காவல்துறைக்கும், முகாம் இளைஞர்களுக்கும் நடந்த மோதலில் முகாம் இளைஞர்கள் சிலருக்கு பலத்த காயங்கள் ஏற்ப்பட்டது அத்துடன் பலரின் மீது பொய்வழக்குகளை காவல்துறையினர் பதிந்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டு இருக்கும் 16 பேரையும் உடனடியாக சுபா முத்துக்குமார் பாசறை சேர்ந்த சீலன் பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு இலவசமாக உங்களுக்கு பிணை ஏற்பாடுகளை நாங்கள் செய்து கொண்டு இருக்கிறோம் என கூறியு தைரியமாக இருங்கள் ஆறுதல் சொல்லி வந்தனர்.

அதன் பின்னர் பா முத்துக்குமார் பாசறை சேர்ந்த சீலன் பிரபாகரன் அவர்கள் வழக்கறிஞர் ஆ.டேவிட் , வழக்கறிஞர். தீரன் திருமுருகன்,வழக்கறிஞர் பிரின்சோ ,வழக்கறிஞர் சுரேஷ்குமார் மற்றும் உதவியாளர் பொற்கரன் ஆகியோரின் உதவியை நாடி கைது செய்யப்பட்ட அனைவர்க்கும் பிணை எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அது மட்டுமல்லாமல் ஈழத்தமிழர் மீது பொய்வழக்கு பதிவு செய்துள்ளனர் என அவர்களது குடும்பங்களுடன் சென்று ராமநாதபுரம் கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்துள்ளனர்.

சீலன் பிரபாகரன்
(ஒருங்கினைப்பாளர்)
தமிழ்தேசிய போராளி
சுபா முத்துக்குமார் பாசறை,
தமிழர்நாடு
தொடர்புக்கு
7373817422

Related posts

Top