பிரித்தானியாவில் குண்டுத்தாக்குதல் – 20 பேர் பலி, 59 பேர் காயம்

பிரித்தானியாவில் அமைந்துள்ள மன்செஸ்டர் அரினா மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 22 பேர் உயிரிழந்துள்ளதுடன் 59 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

நேற்று இரவு பிரித்தானிய நேரப்படி இரவு 10.35 மணியளவில் குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க பாப் இசை பாடகியான அரியானா கிராண்டேயின் இசை நிகழ்ச்சி இடம்பெற்ற இடத்தினில் மேற்படி குண்டுத் வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

இதனால் பிரித்தானியாவில் பதற்ற நிலை தோற்றுவிக்கப்பட்டள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை குறித்த தாக்குதல் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் என அந்நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளார்.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து மன்செஸ்டர், விக்டோரியா புகையிரத நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், அதனூடாகச் செல்லும் சகல புகையிரத பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அத்துடன் குண்டு வெடிப்பு இடம்பெற்ற பகுதியிலிருந்து விலகி இருக்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் அவசர உதவிகளுக்காக தொலைபேசி இலக்கத்தையும் கொடுத்துள்ளனர்.

மன்செஸ்டர் குண்டு வெடிப்பையடுத்து பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தனது பிரச்சார நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு, அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

Top