மன்செஸ்டர் தாக்குதல் தொடர்பில் 16ஆவது சந்தேகநபர் கைது – பிரித்தானிய பொலிசார்

பிரித்தானியாவின் மெஞ்செஸ்டர் அரீனாவில் கடந்தவாரம் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிசார் இதுவரை 15 பேரை கைதுசெய்து தடுத்துவைத்துள்ளனர்.

இதேவேளை மெஞ்செஸ்டர், இலண்டன் உட்பட பிரித்தானியாவின் முக்கிய இடங்களில் தொடர்ந்தும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொலிசாருடன் இராணுவத்தினரும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

மெஞ்செஸ்டர் அரீனாவில் கடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற அமெரிக்க பொப் பாடகியான அரியானா கிறென்டேயின் இசை நிகழ்ச்சியின் போது சல்மான் அபேதி என்ற 22 வயதுடைய தற்கொத் தாக்குதல்தாரி நடத்திய தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதுடன் 116 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களில் 23 பேர் தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெ்ற்று வருகின்றனர். இந்த நிலையில் பிரித்தானிய பொலிசாரும் புலனாய்வுத்துறையினரும் மெஞ்செஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்களை தேடி பாரிய தேடுதல் வேட்டையொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இதற்கமைய இன்று காலை வரை 16 பேர் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதேவெளை மேலும் இருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட போதிலும் பின்னர் அவரல்கள் அப்பாவிகள் என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டனர்.

மேற்கு சசெக்ஸ் மாவட்டத்தின் சோரெய்ம் பை சீ என்ற இடத்தில் இன்றைய தினம் 16 ஆவது சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாக மெஞ்செஸ்டர் பொலிசார் தெரிவித்தனர்.

பிறைடன் என்ற கடற்கரை நகரை அண்மித்த பகுதியான வெஸ்ட் சசெக்ஸ் மாவட்டத்தின் சொர்ஹேய்ம் வை சீ என்ற இடத்தில் வைத்து 23 வயதுடைய சந்தேக நகர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றார்.

இந்த நிலையில் மெஞ்செஸ்டர் குரோடன் பகுதியில் வைத்து நேற்றைய தினம் 19 வயதுடைய இளைஞர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டிருக்கின்றார்.

இதேவேளை மெஞ்செஸ்டர் அரீனா தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் புலனாய்வு விசாரணைகளை மேற்கொண்டுவரும் படையினர் இன்று மெஞ்செஸ்டரின் தென்பகுதியிருலுள்ள வெலி ரேஞ:ச் பகுதியிலுள்ள சந்தேகத்திற்கு இடமான வீடொன்றை சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியுள்ளனர்.

லிபியாவை பூர்வீகமாகக் கொண்ட பெண் ஒருவரும் ஆறு குழந்தைகளும் வாழ்ந்துவரும் வீடொன்றே சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. எனினும் இதன்போது எந்தக் கைதுகளும் இடம்பெறவில்லை என மெஞ்செஸ்டர் பொலிசார் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மெஞ்செஸ்டர் அரீனா தற்கொலைத் தாக்குதலை நடத்திய சல்மான் அபேதி தொடர்பில் கவனயீனமானமாக இருந்த குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள எம்.ஐ.-5 என்ற பிரித்தானிய உள்ளக உளவுத்துறையின் நடவடிக்கை தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய உள்துறை அமைச்சர் அம்பர் ரூட் அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தற்போது இடம்பெறும் விசாரணைகளும் பாதுகாப்பு நடைமுறைகளும் எந்தவித குறைபாடுகளும் இன்றி உச்ச அளவில் இருப்பதாக எஉள்துறை அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மெஞ்செஸ்டர் அரீனாவில் தற்கொலைத் தாக்குதலுக்கு முன்னதாக அந்தத் தாக்குதலை நடத்திய சல்மான் அபேதி உட்பட லிபியாவில் பெற்றோர்கள் வாழும் 20 ஆயிரம் லிபிய பூர்வீகத்தைக் கொண்டவர்கள் தொடர்பில் எம்ஐ.-5 என்ற பிரித்தானிய உளவுத்துறை அனைத்துத் தகவல்களையும் அறிந்து வைத்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த நிலையில் மூவாயிரம் லிபியர்கள் பிரித்தானிய உளவுத்துறை உட்பட பாதுகாப்புப் படையினரின் கடுமையான கண்காணிப்புக்குள் தொடர்ந்தும் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன

Related posts

Top