இன்றைய நாள் ஜனநாயகத்திற்கு முக்கியமானது: ஜெரமி கோர்பின்

பிரித்தானிய பொதுத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடைபெறுகின்ற இன்றைய நாள் எமது ஜனநாயகத்திற்கான ஒரு முக்கியமான நாள் என தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார்.

மிகவும் பரபரப்பாக நடைபெற்று வரும் வாக்குப் பதிவுகளுக்கு மத்தியில் வடக்கு லண்டன் Holloway யில் ஜெரமி கோர்பின் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது, “இன்றைய தினம் இங்கு வந்துள்ள அனைவருக்கும் எனது நன்றிகள். நான் தற்போது வாக்களித்துள்ளேன். எங்கள் கட்சியின் பிரசாரத்தை நினைத்து பெருமைப்படுகின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Top